மாடுகளால் போக்குவரத்து பாதிப்பு

Update: 2026-02-15 19:20 GMT

வேலூர் நகரம் முழுவதும் பல்வேறு இடங்களில் ஏராளமான மாடுகள் சுற்றித்திரிகின்றன. மாடுகளால் மக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் பெரும் தொல்லையாக உள்ளது. பழைய, புதிய பஸ் நிலையங்கள், நேதாஜி மார்க்கெட், வள்ளலார் டபுள் ரோடு அருகில் பைபாஸ் ரோடு உள்ளிட்ட இடங்களில் ஏராளமான மாடுகள் சுற்றித்திரிகின்றன. மாடுகள் நடமாட்டத்தால் போக்குவரத்துப் பாதிப்பு ஏற்படுகிறது. மாடுகளை கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-மணிமாறன், வேலூர்.

மேலும் செய்திகள்