அரக்கோணம் நகர பஸ் நிலையத்துக்கு பல்வேறு ஊர்களில் இருந்தும் பஸ்கள் வந்து செல்கின்றன. இந்தப் பஸ் நிலையத்தில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலால் பயணிகள் செல்ல வேண்டிய பஸ்சை கண்டறிவது சிரமமாக உள்ளது. எனவே அரசு போக்குவரத்துக்கழக நேரக் காப்பாளரை நியமித்து அரசு பஸ்களின் வருகை, புறப்பாடு குறித்து ஒலிபெருக்கியில் அறிவிப்பு வெளியிட்டால் பயணிகளுக்கு மிகவும் உபயோகமாக இருக்கும். இதுதொடர்பாக அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-குமார், அரக்கோணம்.