மீண்டும் வேகத்தடை அமைக்கப்படுமா?

Update: 2022-07-14 18:26 GMT


திருவண்ணாமலைக்கு கடந்த 8 மற்றும் 9-ந் தேதிகளில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகை தந்தார். அப்போது அவர் பங்கேற்ற நிகழ்ச்சிக்கு செல்லும் வழியில் சாலையில் அமைக்கப்பட்டிருந்த பெரும்பாலான வேகத்தடைகள் அகற்றப்பட்டன. இதனால் அந்தச் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் சில சமயங்களில் அதிவேகமாக செல்கின்றனர். இதன் மூலம் விபத்துகள் ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் மீண்டும் அதே இடங்களில் வேகத்தடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ராஜன், திருவண்ணாமலை.

மேலும் செய்திகள்