பஸ் நிறுத்தத்தில் நிறுத்தி பயணிகளை ஏற்ற வேண்டும்

Update: 2022-07-22 14:21 GMT

ராணிப்பேட்டையில் ஒரு சினிமா தியேட்டர் அருகில் புதிதாக பஸ் நிறுத்தம் அமைக்கப்பட்டுள்ளது. சாலையில் விபத்து ஏற்படும் என்பதால், ஏற்கனவே பஸ் நிறுத்தம் அகற்றப்பட்டு உள்பக்கத்தில் புதிய பஸ் நிறுத்தம் அமைக்கப்பட்டுள்ளது.

ஆனால், பஸ்கள் பழையபடி சாலையிலேயே நிறுத்தப்படுகின்றன. இதனால் சாலை போக்குவரத்தில் இடையூறுகள் ஏற்பட்டு, விபத்து நடக்கும் நிலை உள்ளது. பஸ் நிறுத்தத்தில் காத்திருக்கும் பயணிகளும் ஓடி வந்து, பஸ்களில் ஏறி செல்ல மிகுந்த சிரமப்படுகின்றனர்.

எனவே பஸ்களை உள்புறத்தில் உள்ள பஸ் நிறுத்தத்தில் நிறுத்தி பயணிகளை ஏற்றி செல்ல வேண்டும்.

-ஆர்.குணசேகரன், ராணிப்பேட்டை.

மேலும் செய்திகள்