காட்பாடி-பாகாயம் இடையே செல்லும் டவுன் பஸ்களான 1, 2 ஆகியவை ஓடைப்பிள்ளையார் கோவில் எதிரில் உள்ளே காந்திநகருக்குள் வந்து செல்வது வழக்கம். ஆனால், ஒரு சில தனியார் பஸ்கள் சமீப காலமாக காந்திநகருக்குள் வருவது இல்லை. நேராகச் சென்று விடுகின்றன. இதனால், பஸ் பயணிகள் அவதிப்படுகின்றனர். போக்குவரத்துத்துறை அதிகாரிகள் நடவடிக்க எடுப்பார்களா?
-ராஜவேங்கை, காட்பாடி.