போக்குவரத்துக்கழக பணிமனை அமைக்கப்படுமா?

Update: 2025-09-21 11:50 GMT

ராணிப்பேட்டை மாவட்டத்தின் பெரிய நகராட்சியாக அரக்கோணம் உள்ளது. அங்கு, அரசு போக்குவரத்துக்கழக பணிமனை இல்லை. திருத்தணி, திருவள்ளூர், காஞ்சீபுரம், வேலூர் ஆகிய அரசு போக்குவரத்துக்கழக பணிமனைகளில் இருந்து மட்டுமே இப்பகுதிக்கு பஸ்கள் இயக்கப்படுகின்றன. அரக்கோணம் பகுதியில் அரசு போக்குவரத்துக்கழக பணிமனை அமைந்தால், இங்கிருந்து பல ஊர்களுக்கு பஸ் வசதி செய்து கொடுக்கலாம். ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு இன்று வரை நேரடி பஸ் வசதி இல்லை. இதுபோன்ற பல பிரச்சினைகளை சமாளிக்கலாம். மேலும் அரக்கோணம் ரெயில் நிலையத்தில் இருந்து பெருமூச்சி வட்டாரப் போக்குவரத்து அலுவலகம், கும்பினிபேட்டை போன்ற பல பகுதிகளுக்கு பஸ்களை இயக்கலாம். மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?

-அரவிந்தன், அரக்கோணம். 

மேலும் செய்திகள்