புதுப்பிக்கப்படாத அமரர் ஊர்தி

Update: 2023-07-16 16:57 GMT

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் பல்வேறு அரசு மருத்துவமனைகளில் அரசு சார்பில் இலவச அமரர் ஊர்தி இயக்கப்படுகிறது. அந்த வாகனம் முறையாக வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் மூலம் புதுப்பிக்கப்படாமல் இயக்கப்படுகிறது. விபத்து ஏற்பட்டால் வாகனத்தில் வரும் டிரைவர், உதவியாளர் மற்றும் இறந்தவரின் உறவினர்கள் பாதிக்கப்படும் நிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து அந்த வாகனத்தை புதுப்பிக்க அனுப்ப ஆவண செய்ய வேண்டும்.

-கோவிந்தராஜ், வேலூர்.

மேலும் செய்திகள்