போக்குவரத்து சிக்னல் தேவை

Update: 2025-11-23 17:40 GMT

திருப்பத்தூர்-வாணியம்பாடி செல்லும் சாலையில் ஒரு தனியார் கல்லூரி உள்ளது. இதன் அருகே தினசரி காய்கறி மார்க்கெட், வணிக வளாகங்கள், வங்கி உள்ளிட்டவை உள்ளன. இதனால் காலை மற்றும் மாலை நேரங்களில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. சாலையை கடந்து செல்லும்போது விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே அந்த இடத்தில் போக்குவரத்து சிக்னல் அமைக்க வேண்டும்.

-மாதேஷ், திருப்பத்தூர்

மேலும் செய்திகள்