வேலூர் மாவட்டம் பொய்கை கிராமத்தில் செவ்வாய்க்கிழமை தோறும் வாரச்சந்தை நடக்கிறது. அங்கு, கால்நடைகள், காய்கறிகளை ஏற்றி வரும் சரக்கு வாகனங்கள் சாலையை ஆக்கிரமித்து நிறுத்தப்படுவதால், சர்வீஸ் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. பஸ்கள், கனரக வாகனங்கள் செல்ல சிரமமாக உள்ளது. போக்குவரத்து நெரிசலை ஒழுங்குபடுத்தி அனுப்ப சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-எஸ்.பிரவீன், சமூக ஆர்வலர், பொய்கை.