ஆற்காடு நகரில் பொதுமக்களை மற்றும் வாகன ஓட்டிகளை அச்சுறுத்தும் வகையில் ஆங்காங்கே பேனர்கள், பதாகைகள் வைத்துள்ளனர். இதனால், வாகன ஓட்டிகளின் கவனம் சிதறி விபத்துகள் ஏற்படுகின்றன. மேலும் மின் கம்பங்கள் மற்றும் பாலாறு பாலங்களில் பதாகைகளை போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படும் வகையில் வைத்துள்ளனர். தற்போது அடிக்கடி சூறைக்காற்றுடன் மழைப் பெய்வதால் பேனர்கள், பதாகைகள் அறுந்து வாகன ஓட்டிகள் மீது விழும் அச்சம் உள்ளது. இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-மணி, ஆற்காடு.