திருப்பத்தூர் ஆசிரியர் நகர் பகுதியில் வாணியம்பாடி-சேலம் 4 வழிச்சாலை விரிவாக்கப் பணி நடந்து வருகிறது. இதற்காக ஆசிரியர் நகர் நூலகம் எதிரே மழைநீர் செல்ல பாலம் கட்டும் பணி நடந்து வருகிறது. இதற்காக, ஒருபுறம் மட்டுமே போக்குவரத்து அனுமதிக்கப்பட்டுள்ளது. இதனால் காலை, மாலை நேரங்களில் பள்ளி வாகனம் மாணவ, மாணவிகள் மற்றும் வேலைக்கு செல்பவர்களால் அந்த இடத்தில் கடுமையானப் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் பள்ளி மாணவ, மாணவிகள் அவதிப்படுகின்றனர். மேலும் மாணவர்கள் சரியான நேரத்துக்கு பள்ளிக்குச் செல்ல முடியவில்லை. எனவே காலை, மாலை நேரங்களில் அந்த இடத்தில் போக்குவரத்து போலீசாரை நிறுத்த வேண்டும்.
-பிரீத்திகா, திருப்பத்தூர்.