ஆற்காட்டில் உள்ள அண்ணா சாலை, ஜீவானந்தம் சாலை ஆகிய பகுதிகளில் கடை நடத்துபவர்கள் கடைக்கு வரும் நபர்கள் கடை முன்பு வாகனங்களை நிறுத்துகின்றனர் இவ்வாறு நிறுத்தப்படுவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும் ஜீவானந்தம் சாலை ஒரு வழிச்சாலை ஆகும். அதேபோல் அண்ணா சாலை ஆற்காட்டிலுள்ள ஆரணி சாலை சந்திப்பு முதல் பஸ் நிலையம் வரை ஒரு வழிச்சாலை. இது குறித்து விளம்பர பலகையும் வைக்கப்பட்டுள்ளது.ஆனால் பஸ் மற்றும் லாரி, கார் ஆகியவை ஒரு சில நேரங்களில் ஒரு வழிச்சாலையில் எதிர் திசையில் வருவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதை கட்டுப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-பழனிச்சாமி, சமூக ஆர்வலர், ஆற்காடு.