போக்குவரத்து நெரிசல்

Update: 2023-09-06 16:43 GMT

கண்ணமங்கலம் புதிய சாலை பகுதியில் ஏராளமான மளிகை கடைகளும், வணிக நிறுவனங்களும் உள்ளன. அந்தக் கடைகளுக்கு தினமும் சரக்கு ஏற்றி வரும் வாகனங்களை ஆங்காங்கே கடைகள் முன்பு நிறுத்தி பொருட்களை இறக்குவதால், போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளது. எனவே சரக்கு வாகனங்களை போக்குவரத்துக்கு இடையூறாக சாலையில் நிறுத்தாமல், அருகில் உள்ள பொதுவான இடத்தில் நிறுத்தி சரக்குகளை இறக்க நடவடிக்கை எடுப்பார்களா?

-மீனாட்சிசுந்தரம், கண்ணமங்கலம்.

மேலும் செய்திகள்