ஆற்காடு நகரில் முக்கிய சாலைகளாக திகழ்வது அண்ணா சாலை, பஜார் சாலை, ஆரணி சாலை ஆகியவை ஆகும். இந்தச் சாலைகளில் கடைகள் வைத்திருப்பவர்கள், அந்தக் கடைகளுக்கு வரும் வாடிக்கையாளர்கள் தங்களின் வாகனங்களை கடைகளுக்கு எதிரிலேேய சாலையில் நிறுத்திவிட்டு பொருட்களை வாங்குகிறார்கள். இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. பஜார் சாலை ஒரு வழி பாதையாக அறிவிக்கப்பட்டு பெயர் பலகை வைக்கப்பட்டு இருந்தாலும் வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்றாமல் ஒரு வழி பாதை வழியாகவே செல்கின்றனர். எனவே காலை மற்றும் மாலை வேளைகளில் மேற்கண்ட முக்கிய சாலைகளில் போக்குவரத்துப் போலீசார் நியமிக்கப்பட்டால் போக்குவரத்து நெரிசலை குறைக்கலாம். அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-சண்முகம், ஆற்காடு.