அணைக்கட்டு தாலுகா ஒடுகத்தூர் பேரூராட்சியில் குடியாத்தம், வேலூர், ஆம்பூர், ஆசனாம்பட்டு செல்லும் சாலையில் அரசு வங்கி உள்ளது. அந்த வங்கிக்கு தினமும் பலர் வந்து செல்கின்றனர். வங்கி எதிரே எப்போதும் மக்கள் கூட்டம் அதிகமாக உள்ளது. வங்கிக்கு எதிேர வாகனங்களை நிறுத்த போதிய இட வசதி இல்லாததால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அருகிலேயே காவல்துறை இருந்தும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த முன் வரவில்லை. போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த போலீசார் முன்வருவார்களா?
-சுந்தரமூர்த்தி, ஒடுகத்தூர்.