கண்ணமங்கலம் அருகே உள்ள அழகுசேனை கிராமத்தில் ஏராளமான மக்கள் வசிக்கின்றனர். பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் வேலூர், ஆரணி செல்ல கண்ணமங்கலம் பேரூராட்சி பஸ் நிலையத்துக்கு 3 கிலோ மீட்டர் தூரம் வந்து பஸ் பயணம் செய்து வருகின்றனர். எனவே வேலூர்-சின்னப்புத்தூர் சென்று வரும் டவுன் பஸ்சை தினமும் காலை 9 மணிக்குள் ஒருமுறையும், அதே பஸ்சை மாலை 5 மணிக்குள் ஒருமுறையும் அழகுசேனை கிராமத்துக்கு வந்து செல்ல போக்குவரத்துக் கழக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சாம்பசிவம், கண்ணமங்கலம்.