பட்ட மரத்தை அகற்ற வேண்டும்

Update: 2022-09-27 11:48 GMT


வேலூர் மாநகராட்சி முஸ்லிம் தொடக்கப் பள்ளி அருகே விண்ணரசி மாதா தேவாலயத்திற்கு செல்லும் சாலை ஓரம் பட்ட மரம் ஒன்று உள்ளது. காற்றடிக்கும் போதெல்லாம் அந்த மரத்தின் கிளைகள் முறிந்து விழுகிறது. அங்கு வாகன போக்குவரத்து அதிகமாக உள்ளதால் விபரீத சம்பவம் நடைபெறுவதற்கு முன்பு ஆபத்தான நிலையில் உள்ள பட்ட மரத்தை அகற்ற சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்