திருவண்ணாமலை வேங்கிகால் பகுதி காலை முதல் இரவு வரை எப்போதும் பரபரப்பாக காணப்படும். அங்குள்ள அண்ணா நுழைவு வாயிலில் இருந்து போளூர் சாலை வழியாக மாலை நேரத்தில் ஒரு சில இளைஞர்கள் மோட்டார்சைக்கிளில் மின்னல் வேகத்தில் செல்கின்றனர். இதனால் சாலையில் நடந்து செல்லும் முதியவர்கள், பெண்கள் மற்றும் பொதுமக்கள் மிகவும் அச்சப்படுகிறார்கள். சாலையில் வேகத்தடைகள் இருந்தாலும் மோட்டார் சைக்கிளில் மின்னல் வேகத்தில் செல்லும் அவர்கள் வளைந்து, நெளிந்து செல்வதை காண்போருக்கும் அச்சம் ஏற்படுகிறது. இதுகுறித்து பலமுறை காவல்துறையில் தகவல் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்க வில்லை. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.