கோத்தகிரி பஸ் நிலைய பகுதியில் நகராட்சி குடிநீர் வினியோக திட்டத்திற்காக பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதற்காக சாலை தோண்டப்பட்டது. பின்னர் சாலையை சீரமைத்தனர். ஆனால் முறையாக சீரமைக்காததால் ஜல்லிக்கற்கள் சிதறி கிடக்கின்றன. இதனால் அந்த சாலையில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் தவறி விழுந்து காயமடைந்து வருவதுடன், ஜல்லிக்கற்கள் சிதறி வாகனங்களின் கண்ணாடிகள் சேதமடைந்து வருகின்றன. எனவே சாலையில் சிதறி கிடக்கும் ஜல்லிக்கற்களை அகற்ற வேண்டும்.