ரோட்டில் கடைபோடுவதால் ேபாக்குவரத்து நெரிசல்

Update: 2022-08-08 13:28 GMT

ராணிப்பேட்டை மாவட்டம் சிப்காட் அருகே தேசிய நெடுஞ்சாலையையொட்டி ஞாயிறு தோறும் வாரச்சந்தை நடக்கிறது. ஒருசில வியாபாரிகள் தேசிய நெடுஞ்சாலையிலேயே கடைகளை போடுகிறார்கள். இதனால் சந்தைக்கு வருவோர் தேசிய நெடுஞ்சாலையிலேயே தங்கள் வாகனத்தை நிறுத்தி விட்டு சந்தையில் காய்,கறி உள்ளிட்ட பொருட்களை வாங்கி செல்கிறார்கள். இதனால் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. சில சமயங்களில் விபத்துகளும் நடக்கிறது. எனவே தேசிய நெடுஞ்சாலையில் வியாபாரிகள் கடை போடாதவாறும், விபத்துகள் ஏற்படுவதைத் தடுக்கவும் அதிகாரிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.

-சி.செங்கல்வராயன், சிப்காட், ராணிப்பேட்டை

மேலும் செய்திகள்