வேலூர் சாரதி மாளிகையில் பொதுமக்கள் நடப்பதற்காக அமைக்கப் பட்டு உள்ள நடை பாதையில் இருசக்கர வாகனங்கள் ஆக்கிரமித்து நிறுத்தப்பட்டு வருகின்றன. இதனால் நடந்து செல்லும் பொதுமக்களுக்கு பெரும் இடையூறு ஏற்பட்டு உள்ளது. குறிப்பாக இங்குள்ள மாநகராட்சி கணினி வரி வசூல் மையம் முன்பு நடை பாதையை ஆக்கிரமித்து இரு சக்கர வாகனங்கள் நிறுத்த பட்டு வருகிறது. நடைபாதையில் வாகனங்கள் நிறுத்தப்படுவதை தடுக்க மாநகராட்சி அதிகாரிகள் முன்வர வேண்டும்.
-முருகன், வேலூர்.