வேலூர் புதிய பஸ் நிலையத்தில் இருந்து தினமும் இரவு 10.10 மணிக்கு நாகப்பட்டினத்துக்கு ஒரே ஒரு பஸ் மட்டுமே உள்ளது. அதுவும் கும்பகோணம் போக்குவரத்துக்கழக பஸ் மட்டுமே உள்ளது. ஆனால் கடந்த 2 மாதமாக அந்தப் பஸ் சரியாக வருவதில்லை. அந்தப் பஸ்சை நம்பி வரும் பயணிகள் அவதிக்கு ஆளாக வேண்டிய நிலை உள்ளது. பஸ் வருமா? வராதா? என உறுதியாக யாரும் தெரிவிப்பதில்லை. காரணம் கேட்டால் பஸ் நிலையத்தில் கும்பகோணம் போக்குவரத்துக் கழகத்துக்கு நேர அலுவலகம் இல்லை என்கிறார்கள். பஸ் வராது என உறுதியாகத் தெரிந்தால் பயணிகள் சிதம்பரம் அல்லது கும்பகோணம் செல்லும் பஸ்சில் ஏறி செல்வார்கள். இதற்கு அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பார்களா?
-விஷ்ணு, சத்துவாச்சாரி.