லத்தேரியில் இருந்து பனமடங்கி செல்லும் சாலையில் மெயின் பாதையில் கிலோ மீட்டர் பலகையை வைக்காமல், சுற்றுப்பாதையான செஞ்சி, வெங்கடாபுரம் செல்லும் பாதையில் கிலோ மீட்டர் பெயர் பலகையை வைத்துள்ளனர். பனமடங்கி ஊருக்கு வரும் புதியவர்கள் இந்தப் பெயர் பலகையை பார்த்து விட்டு தூரம் குைறவாக இருக்கும் மெயின்பாதையில் செல்லாமல், தூரம் அதிகமாக இருக்கும் சுற்றுப்பாதையில் செல்ல ேவண்டிய நிலை ஏற்படும். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பெயர் பலகையை மெயின் பாதையில் ைவத்தால் பயனுள்ளதாக இருக்கும். அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-ரவிக்குமார், பனமடங்கி.