தஞ்சையில் இருந்து பூதலூர் செல்லும் கள்ளப்பெரம்பூர் சாலையின் இரு புறமும் கருவேல மரங்கள் அடர்ந்து வளர்ந்து உள்ளது. இதனால் சாலையில் செல்லும் மோட்டார் சைக்கிள் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துக்குள்ளாகின்றனர். இரவு நேரத்தில் எதிர் திசையில் வரும் கனரக வாகனங்களுக்கு வழி விட ஒரமாக செல்லும் போது முள் கண்ணில் அடித்து மோட்டார் சைக்கிளில் செல்லும் வாகன ஒட்டிகள் விபத்துக்குள்ளாகின்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறையில் சாலை ஓரத்தில் போக்குவரத்துக்கு இடையூறாக வளர்ந்துள்ள கருவேல மரங்களை வெட்டி அப்புறப்படுத்த வேண்டும்.
பொதுமக்கள், கள்ளப்பெரம்பூர்.