ஈரோடு கருங்கல்பாளையம் பழைய சார் பதிவாளர் அலுவலக பஸ் நிறுத்தத்தில் பயணிகள் நிழற்குடை வசதி இல்லை. இதனால் வெயிலிலும், மழையிலும் மக்கள் கால் கடுக்க காத்து நிற்க வேண்டிய நிலை உள்ளது. மேலும் பஸ் நிறுத்தத்தில் உள்ள பொது கழிப்பறையில் தண்ணீரின்றி சிரமப்படுகின்றனர். எனவே நிழற்குடை அமைத்து தரவும், கழிப்பறையில் தண்ணீர் வசதி ஏற்படுத்தி தரவும் அதிகாரிகள் முன்வருவார்களா?