ஈரோடு - கோபி 4 வழிச்சாலையில் உள்ள குள்ளம்பாளையம் பிரிவில் வேகத்தடை இல்லை. இதனால் அந்த வழியாக தினமும் காலை மற்றும் மாலை நேரங்களில் வாகனங்கள் வேகமாக சென்று வருகின்றன. இதன் காரணமாக இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் நடந்து செல்பவர்கள் அதிகம் விபத்தில் சிக்குகின்றனர். வேகத்தடை அமைக்க நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் முன்வருவார்களா?