ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி நகர் பகுதியில் காலை நேரங்களில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து காணப்படுகிறது. இதனால் வேலைக்கு செல்பவர்கள், பள்ளி செல்லும் மாணவர்கள், வாகன ஓட்டிகள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் நிலவும் போக்குவரத்து நெரிசலை கட்டுக்குள் கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும்.