பழனியில், திண்டுக்கல் சாலையில் அமைந்துள்ள தனியார் கல்லூரி எதிரே ஆக்கிரமிப்பு அதிகம் உள்ளது. மேலும் இந்த பகுதியில் சாலையோர ஆக்கிரமிப்பு கடைகளும் உள்ளன. இதனால் அந்த பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. வாகன ஓட்டிகள் பெரிதும் அவதி அடைகின்றனர். எனவே ஆக்கிரமிப்பை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.