பாலப்பணிகளை விரைந்து முடிக்க கோரிக்கை

Update: 2026-10-04 13:53 GMT

கரூர் மாவட்டம் சின்னஆண்டாங்கோவில் மெயின் சாலையில் கழிவுநீர் கால்வாய்க்காக பாலம் கட்டப்பட்டு, மேல் தார்சாலை அமைப்பதற்காக ஜல்லிகள் கொட்டப்பட்ட நிலையில் பணிகள் 6 மாதங்களாக கிடப்பில் போடப்பட்டிருந்தன. பொதுமக்களின் தொடர் கோரிக்கையை அடுத்து பாலப்பணி நடைபெற்று வருவதாக அறிவிப்பு பதாகைகள் வைக்கப்பட்டு ஒரு மாதமாகியும் பணிகள் தொடங்கவில்லை. எனவே பாலப்பணிகளை விரைந்து முடிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்