அரியலூர் மாவட்டம் முத்துவாஞ்சேரி கிராமத்தில் இருந்து அரியலூருக்கு காலை நேரங்களில் போதிய அளவில் பஸ்கள் இயக்கப்படவில்லை. இதனால் விக்கிரமங்கலம் மற்றும் அரியலூர் பகுதிகளுக்கு செல்லும் மாணவர்கள் மற்றும் வேலைக்கு செல்வோர் கடும் அவதியடைந்து வருகின்றனர். எனவே காலை நேரங்களில் கூடுதல் பஸ்களை இயக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.