அரியலூர் மாவட்டம் தா.பழூர் ஒன்றியம் அரங்கோட்டை கிராமத்தில் கொள்ளிடம் ஆற்றுக்கு செல்லும் வழியில் பொன்னாற்றின் மீது உள்ள பழமையான பாலம் மிகவும் சிதிலமடைந்துள்ளது. இதனால் அவ்வழியாக வாகனங்களில் செல்ல முடியாமல் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே பாலத்தை சீரமைத்து பயன்பாட்டுக்கு கொண்டு வர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.