நெய்வேலி ஜெயப்பிரியா பஸ் நிறுத்தம் பகுதியில் கடைகளுக்கு வரும் வாகனஓட்டிகள் சாலையின் இருபுறமும் தங்களது வாகனங்களை தாறுமாறாக நிறுத்திவிட்டு செல்கின்றனர். இதனால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன், அடிக்கடி வாகன விபத்துகளும் நிகழ்கின்றன. மேலும் பாதசாரிகளும் கடும் அவதியடைந்து வருகின்றனர். பொதுமக்களின் நலன் கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் போக்குவரத்து நெரிசலை சரிசெய்ய விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமாகும்.