பாளையங்கோட்டை யூனியன் புதுக்குளம் பஞ்சாயத்து ஆயன்குளம் பகுதியில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. ஆனால் 25 ஆண்டுகளாக எங்கள் ஊருக்கு பஸ் வசதி செய்து தரப்படவில்லை. பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், வேலைக்கு செல்பவர்கள் என தினமும் 100-க்கும் மேற்பட்டோர் வெளியூருக்கு செல்ல சிரமமாக உள்ளது. எனவே எங்கள் ஊருக்கு முறையான பஸ் வசதி செய்து தருமாறு வேண்டுகிறேன்.