புதுச்சேரியில் வார இறுதிநாட்களில் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகிறார்கள். அவர்களது வாகனங்களை நகரின் பிரதான சாலையோரங்களில் நிறுத்துவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இந்த பிரச்சினையை தீர்க்க முறையாக வாகன நிறுத்த வசதியை அரசு ஏற்படுத்தி கொடுக்க வேண்டும்.