நாமக்கல் மாநகரில்-திருச்செங்கோடு-சேலம் ரோடு சந்திப்பில் சிக்னல் இருந்தும், வாகன நெரிசல் ஏற்பட்டு வருகிறது. மேற்கண்ட முக்கிய சந்திப்புகளில் தற்போது போக்குவரத்து போலீசார் பணியில் ஈடுபட்டு, வாகன போக்குவரத்தை சீரமைத்து வருகின்றனர். எனவே தானியங்கி சிக்னல்கள் அமைத்தால் போக்குவரத்து நெரிசலை குறைக்க முடியும். இதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.