உத்தமபாளையம் அருகே கோகிலாபுரம் முக்கிய வீதி குறுகிய சாலை என்பதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இந்த நிலையில் சாலையோரம் உள்ள சாக்கடை கால்வாயின் அருகில் மின்கம்பம் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் சாலை மேலும் குறுகி போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் உள்ளது. எனவே மின்கம்பத்தை வேறு இடத்துக்கு மாற்றி அமைக்க வேண்டும்.