கரூர் - ஈரோடு சாலையில் ஆத்தூர் பிரிவு அருகே போக்குவரத்து சிக்னல் செயல்படாமல் உள்ளது. இப்பகுதியில் பாரத் பெட்ரோலியம் உள்ளதால் தினமும் லாரிகள் உள்ளிட்ட வாகனங்கள் அதிகளவில் சென்று வருகின்றன. இந்நிலையில் சிக்னல் செயல்படாததால் விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே வாகன ஓட்டிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு போக்குவரத்து சிக்னலை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.