அரியலூர் மாவட்டம் தா.பழூர் ஒன்றியம் ஸ்ரீபுரந்தானில் இருந்து காரைக்குறிச்சி செல்லும் சாலையின் இருபுறங்களிலும் சீமைக்கருவேல மரங்கள் மற்றும் நாணல் ஆங்காங்கே வளர்ந்துள்ளன. இதனால் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகளுக்கு இடையூறு ஏற்படுகிறது. எனவே வாகன ஓட்டிகளின் நலன் கருதி சாலையோரம் வளர்ந்துள்ள சீமைக்கருவேல மரங்கள் மற்றும் நாணலை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.