திருச்சி மேல சிந்தாமணி பகுதியில் கோட்டை வாய்க்காலில் உடைக்கப்பட்ட பாலம் இதுவரை சீரமைக்கப்படாமல் உள்ளது. இதனால் பள்ளி மாணவர்கள், நோயாளிகள் உள்ளிட்ட பொதுமக்கள் மாற்றுப்பாதையில் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டு சிரமப்படுகின்றனர். எனவே இப்பகுதி பொதுமக்களின் நலன் கருதி பாலம் சீரமைக்கும் பணியை விரைந்து முடிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.