மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகா திருமணஞ்சேரிக்கு அரசு பஸ்கள் இயக்கப்படுகிறது. மேலும் காலை நேரங்களில் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ- மாணவிகள் பஸ் படிக்கட்டில் தொங்கி செல்லும் அவலநிலை உள்ளது. எனவே பாதுகாப்பு கருதி திருமணஞ்சேரிக்கு காலை, மாலை நேரங்களில் கூடுதல் பஸ் இயக்க போக்குவரத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், திருமணஞ்சேரி.