வடமதுரையை அடுத்த மோர்பட்டி மூக்கரபிள்ளையார் கோவில் பஸ் நிறுத்தத்தில் பயணிகள் நிழற்குடை வசதி இல்லை. இதனால் மழை, வெயிலில் பஸ்சுக்காக பயணிகள் நெடுநேரம் கால்கடுக்க காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நிழற்குடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.