திருச்சி மாவட்டம் இனாம் குளத்தூர் பகுதியில் இருந்து சத்திரம் பஸ் நிலையம் வரை காலை 8 முதல் 9 மணிவரை புதிய பஸ்கள் இயக்கப்பட வேண்டும். பிற பகுதிகளில் இருந்து வரும் பஸ்களில் பயணிகள் மற்றும் மாணவர்கள் ஏற முடியாததால் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் ஆபத்தான முறையில் பயணம் செய்து வருகின்றனர். எனவே மாணவர்களின் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்யும் வகையில் காலை குறிப்பிட்ட நேரங்களில் இனாம் குளத்தூரில் இருந்து கூடுதல் பஸ்களை இயக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.