அரியலூர் மாவட்டம் வி.கைகாட்டி பகுதியில் உள்ள தனியார் சிமெண்டு ஆலை அமைந்துள்ள முத்துவாஞ்சேரி சாலையில் இரு பக்கங்களிலும் காலை மற்றும் மாலை நேரங்களில் லாரிகள் நிறுத்தப்படுவதால் கடுமையான போக்குவரத்து இடையூறு ஏற்பட்டு விபத்துகள் நிகழும் அபாயம் உள்ளது. இதனால் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் அச்சத்துடன் பயணம் செய்வதுடன் பெரும் சிரமத்திற்கும் ஆளாகின்றனர். எனவே சாலையின் ஓரத்தில் லாரிகள் நிறுத்தப்படுவதை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.