கோவை அருகே கெம்பநாயக்கன்பாளையம் வழியாக காலை நேரத்தில் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் பயன் பெறும் வகையில் போதிய பஸ் வசதி இல்லை. இதனால் அவர்கள் சுமார் 3 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கரியாம்பாளையம் பிரிவு அல்லது கரியாம்பாளையத்துக்கு நடந்து சென்று பஸ் ஏற வேண்டிய நிலை உள்ளது. இதன் காரணமாக பல்வேறு சிரமங்களை சந்திக்கின்றனர். எனவே அந்த கிராமத்துக்கு அல்லது அந்த கிராமம் வழியாக கூடுதல் பஸ்களை காலை நேரத்தில் இயக்க வேண்டும்.