சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் நகர் பகுதியில் வாகன ஒட்டிகள் சிலர் ஆபத்தை உணராமல் அதிவேகத்தில் வாகனங்களை ஓட்டுகின்றனர். இதனால் சாலையில் செல்லும் பிற வாகன ஓட்டிகள் அச்சமடைந்து நிலைதடுமாறி விபத்துக்குள்ளாகின்றனர். மேலும் சாலையில் பயணிக்கும் பாதசாரிகள் சிரமமடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அதிவேகத்தில் பயணிக்கும் வாகன ஓட்டிகள் மீது உாிய நடவடிக்கை எடுக்க முன்வருவார்களா?