ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை நகர் பகுதியில் பெரும்பாலான முக்கிய சாலைகளில் ஆங்காங்கே வாகனங்களை நிறுத்துவதால் காலை, மாலை நேரங்களில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து காணப்படுகின்றது. இதனால் வேலைக்கு செல்பவர்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் குறிப்பிட்ட நேரத்திற்குள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் நிலவும் போக்குவரத்து நெரிசலை கட்டுக்குள் கொண்டு வர நடவடிக்கை தேவை.