கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர்-ஜெகதேவி சாலையில் அச்சமங்கலம், கொண்டப்ப நாயனபள்ளி செல்லும் பிரிவு கூட்ரோடு உள்ளது. இங்கு 4 இணைப்பு சந்திப்பு சாலைகள் உள்ளன. பல்வேறு கிராம பகுதிகளில் இருந்து இந்த கூட்ரோடு பகுதியில் இருந்து பஸ்சுக்காக ஜெகதேவி, கிருஷ்ணகிரி, பர்கூர் செல்லும் பள்ளி, கல்லூரி மாணவர்களும், பொதுமக்களும் வந்து செல்கின்றனர். இப்பகுதியில் நிழற்கூடம் இல்லாததால் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே பொதுமக்கள் நலன் கருதி விரைந்து நிழற்கூடம் அமைக்க வேண்டும்.