சென்னம்பட்டி சனி சந்தையில் உள்ள பஸ் நிறுத்த நிழற்கூடத்தை ஆக்கிரமித்து விளம்பர பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன. இதனால் நிழற்கூடத்தில் பஸ் ஏற வரும் பயணிகள் நிற்க முடியாமல் அவதிப்பட்டு வருகிறார்கள். போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. எனவே விளம்பர பதாகைகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?