அந்தியூரில் இருந்து கவுந்தபாடி சென்றுவர 5 அரசு பஸ்கள் மட்டுமே இயக்கபடுகிறது. இதனால் நாள்தோறும் கூலிவேலைக்கு செல்லும் தொழிலாளர்கள், பள்ளி-கல்லூரிக்கு செல்லும் மாணவ-மாணவிகள் பெரிதும் சிரமப்படுகிறார்கள். எனவே போக்குவரத்து துறை அதிகாரிகள் கவுந்தப்பாடி, சித்தோடு வழியாக ஈரோட்டுக்கு காலை மற்றும் மாலை வேலைகளில் கூடுதல் பஸ் வசதி செய்து தரவேண்டும்.