வேகத்தடை அமைக்கப்படுமா?

Update: 2026-05-31 14:21 GMT


திருவாரூர் மாவட்டம் நன்னிலம் வட்டம் பேரளம் பேரூராட்சியில் காரைக்கால் செல்லும் பிரதான சாலை உள்ளது இங்கே திருவாரூரில் இருந்து மயிலாடுதுறை செல்லும் வாகனங்களும், மயிலாடுதுறையில் இருந்து திருவாரூர் செல்லும் வாகனங்களும் திரும்பும்போது போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் சிறு சிறு விபத்துக்கள் நடக்கின்றன. ஆகவே இருபுறத்திலும் வேகத்தடை அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முன் வரவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள், திருவாரூர்

மேலும் செய்திகள்